சாம்சங் செயலியால் ஏமாந்த சுமார் ஒரு கோடி பயனாளிகள்

சாம்சங் செயலியால் ஏமாந்த சுமார் ஒரு கோடி பயனாளிகள்

சாம்சங் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதாக போலி செயலியை டவுன்லோடு செய்து சுமார் ஒரு கோடி சாம்சங் பயனாளிகள் ஏமாந்துள்ளனர்.

கூகுள் பிளேஸ்டோரில் சாம்சங் ஆண்டிராய்டு செயலியை அப்டேட் செய்ய பலர் டவுன்லோடு செய்துள்ளனர். ஆனால் பல தரப்பட்ட விளம்பரங்கள், ஆப் அப்டேட் செய்ய கட்டணம் என இந்த போலி ஆப் பலரையும் விழிபிதுங்கச் செய்துள்ளது. தொழில்நுட்ப ஆய்வாளர் ஒருவர் கூகுளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்திலிருந்து அந்த ஆப் நீக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சாம்சங் நிறுவனத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத Updates for Samsung என்ற ஆப் உங்களது ஸ்மார்ட்ஃபோனில் இருந்தால் உடனடியாக அதை டெலிட் செய்துவிட சமூக வலைதளங்களில் சக பயனாளர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

மேலும், சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் அனைத்து ஆப்ஸும் இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளன. இதனால், பயனாளர்கள் போலி ஆப்ஸ் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் சாம்சங் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply