சார்ஜர் வாகனம்
ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி யகருண்டி புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்தவர். ஜார்ஜியா மாகாண பல்கலைக்கழக கம்ப்யூட்டர் பட்டதாரியான இவர் தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம் இன்று ஆப்பிரிக்காவில் ஆயிரம் பேருக்கு மேல் வேலையை உருவாக்கியுள்ளது. சின்ன ஐடியாதான்.. ஒரே சமயத்தில் பல செல்போன்களுக்கு சார்ஜர் ஏற்றும் வாகனத்துடன் நகரங்களில் வலம் வருவது. இதற்காக சோலார் பேனல்களுடன் வாகனத்தை உருவாக்கினார். இந்த சார்ஜர் வாகன பிசினஸ் நல்ல வருமானத்தை தருகிறது.
துணி ஒட்டும் திரவம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக இன்ஜினீயரிங் சயின்ஸ் துறை மாணவர்கள் துணிகளை ஒட்ட வைக்கும் உயிரி தொழில்நுட்ப திரவத்தை உருவாக்கியுள்ளனர். துணிகள் கிழிந்த இடத்தில் ஒரு சொட்டு இந்த திரவத்தை விட்டு கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை விட வேண்டும். சில நொடிகளில் அந்த துணிகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கிறது. பருத்தி, கம்பளி, பாலியெஸ்டர் துணிகளை இதன் மூலம் ஒட்ட வைக்கலாம்.