சாலையில் ஜிம்னாஸ்டிக் சிறுவன் – சிறுமிக்கு அடித்த யோகம்! மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு
கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவர் ஒருவர் சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பாராமல் சம்மர்சால்ட் என்ற ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தினார். அவரை தொடர்ந்து பள்ளி மாணவி ஒருவரும் ஜிம்னாஸ்டிக்கை அசத்தலாக செய்தார். இந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்ற ரோமானிய நாட்டு வீராங்கனை நாடியா உட்பட பலரும் இந்த மாணவன், மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிர்ரன் ரிஜூ பிறவியிலேயே ஜிம்னாஸ்டிக் திறமை பெற்ற இந்த இருவருக்கும் தேசிய ஜிம்னாஸ்டிக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி தர உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் விரைவில் முறைப்படி பயிற்சி பெறவுள்ளனர். சரியான பயிற்சி கொடுத்தால் சர்வதேச அளவில் இருவரும் தாய்நாட்டிற்காக பதக்கங்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Impressive! The boy and girl in uniform whose somersaults on their way to school with bags on their backs, impressed none other than the great Nadia Comaneci, will now become full-time trainees at Sports Authority of India (SAI) Eastern Centre in Kolkata. https://t.co/GOFu49oJT1
— Angie KaranⓋ🌱 (@angie_karan) September 6, 2019