சாலையோர கடைகளில் சூப் சாப்பிடும் முன் இதை படியுங்கள் மக்களே!
தெருவோரக்கடைகளில் விற்கப் படும் சூப், விலை குறைவாக இருக்கிறது எனும்போதே அதன் தரம் சந்தேகத்துக்கு உள்ளாகிறது. ஃப்ரெஷ் காய்கறிகள் அல்லாது, விலை குறைவாகக் கிடைக்கும் மலிவு விலைக்காய்கறிகளையே இவ்வகை சூப் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சுவையூட்டிகளின் மாயத்தால் அதெல்லாம் நமக்குத் தெரியாது.
சைவமே இப்படி என்றால், அசைவ சூப் பற்றி சொல்லவும் வேண்டுமா? மலிவு விலை மட்டன், சிக்கனில் செய்த சூப்தான் கப்களில் ஊற்றி நம் கரங்களில் தரப்படும். அந்த மாமிசத்தை அவர்கள் எந்த நீரில் சுத் தம் செய்திருப்பார்கள், எந்தளவுக்கு கழிவு நீக்கியிருப்பார்கள், என்ன தரத்தில் சமைத்திருப்பார்கள் என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவிர, ரோட்டோரங்களில் உள்ள கடைகள் என்றால், சாலையில் பறக்கும் தூசு மொத்தமும் சூப்புக் குள் தான் தஞ்சம் புகும். கூடவே, இங்கே பயன்படுத்தப்படும் பாத் திரங்கள், கப்புகள், குவளைகளில் ஈக்கள் மொய்க்கும்பட்சத்தில், அது வேறுவிதமான பிரச்னைகளை உண்டு பண்ணும்”.
ஆரோக்கியம் என்று நினைத்து குடித்துக்கொண்டிருக்கும் இந்த சூப் வகைகளில், உண்மையாகவே ஆரோக்கியம் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பாக, பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சூப்களில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட் கள், ஆரோக்கியத்தைவிட, எதிர் விளைவுகளையே அதிகம் தருவதாக இருக்கின்றன.
‘அந்தக் கடையில் சூப் டேஸ்ட்டா இருக்கும்’, ‘இந்தக் கடையில் 10 வெரைட்டி சூப் கிடைக்கும்’ என்று தேடித்தேடிக் குடிப்பவர்களுக்கு, நல்ல பலன் கிடைக்காது. காரணம், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் சூப்களில் சுவையூட்டிகள் மற்றும் மோனோசோடியம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் சுவை அதிகமாகும்… அதேசமயம், சத்துக்கள் போதுமான அளவுக்கு இருக்காது.
இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடம்பில் உப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அந்த பாதிப்பு அதிகமாகக்கூடும். எனவே, மோனோசோடியம் கலந்த சூப்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
VIDEO : Police rescue ‘kaanwariyas’ from drowning into Ganga river