சாலையோர கடையில் திமுகவினர் அராஜகம்: மீண்டும் வைரலாகும் வீடியோ
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக திமுகவினர் அராஜகம் செய்து வருவதை ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளிப்படுத்தி வருகின்றன. பிரியாணி கடை முதல் அழகு நிலையம் திமுகவினர் செய்த அராஜகங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது கட்சியினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பஜ்ஜி விற்கு ஒருவரிடம் திமுக பிரமுகர் ஒருவர் ஓசி பஜ்ஜி கேட்டு தகராறு செய்யும் காட்சியை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அதிமுகவுக்கு மாற்று திமுக ஒன்றே என்று பலர் எண்ணி வரும் நிலையில் திமுகவினர் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டால் ஆட்சியை பிடிப்பது என்பது கனவாகவே போய்விடும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
எனவே இந்த விஷயத்தில் திமுக தலைவர் கடுமையான நடவடிக்கை எடுத்து தனது கட்சி தொண்டர்களை கட்டுக்கோப்புடன் வைத்து கொள்ள வேண்டியது அவசியம் என்றே கருதப்படுகிறது.
Yet another day & yet another caught on video violence by #DMK! Shocking video of DMK cadres threatening roadside eatery vendor for not giving Free Bhajji/Bonda to DMK cadres. Shame on you DMK you will never come back to power in Tamil Nadu. #ஓசிபஜ்ஜிதிமுக #DMKCCTVParidhabangal pic.twitter.com/gq4YSlUMDa
— Dr.SG Suryah (@SuryahSG) September 15, 2018