சாலையோர டீக்கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல்காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வயநாட்டில் இன்று சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் சாலையோர டீ கடையில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு சென்றார்.
வயநாட்டில் சாலையோரம் உள்ள ஒரு டீ கடைக்குள் திடீரென நுழைந்த ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து, பஜ்ஜி, வடை, பலகாரங்களை சாப்பிட்டு மகிழ்ந்தார். பின்னர் அந்த கடைக்காரரிடம் அனைவரும் சாப்பிட்டதற்கு காசு கொடுத்துவிட்டு கடைக்காரருக்கு நன்றி கூறிவிட்டு சென்றார் ராகுல்காந்தி