சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர்
சிங்கப்பூர் நாட்டின் முதல் பெண் அதிபராக ஹாலிமா யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் உருவாகி 47 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இவர் தான் முதல் பெண் அதிபர் என்பதும், தேர்தல் இன்றி தேர்வு செய்யப்பட்ட அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு ஓட்டு போட வாங்காமல் எந்தவித எதிர்ப்பு இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹாலிமா யாகூப், சிங்கப்பூரில் உள்ள சிறுபான்மை இனமான மலாய் இனத்தை சேர்ந்தவர். இருப்பினும் தான் அனைத்து இன மக்களுக்கும் பொதுவான அதிபர் என்று யாகூப் தனது முதல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பெண் அதிபராக பதவியேற்கும் ஹாலிமா யாகூப் அவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.