நமது நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் சிண்டிகேட் வங்கி பழமையானதும் மற்றும் முக்கியமான ஒன்றுமாகும். இந்த வங்கிக்கு நாடு தழுவிய அளவில் கிளைகள் இருப்பதுடன் நல்ல வாடிக்கையாளர் சேவையும் உள்ளது. இந்த வங்கியும் மனிப்பால் பல்கலைக் கழகமும் இணைந்து பேங்கிங் அண்டு பினான்ஸ் பிரிவிலான படிப்பை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றது. இந்த படிப்பை முடிப்பதன் மூலம் தங்கள் எதிர்கால பணியை வங்கியில் தொடர விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக மாற்ற முடியும் என்று நம்பப்படுகிறது.
காலியிட விபரம்: சிண்டிகேட் வங்கியின் மேற்கண்ட படிப்புக்கு மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடு உள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 01.10.2014 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
படிப்புக் கட்டணம்: சிண்டிகேட் வங்கி வழங்கும் இந்தப் படிப்பை மேற்கொள்ள ரூ.3.5 லட்சம் கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட படிப்புக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.500/-ஐக் கட்டணமாக செலுத்தி பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் குழுவிவாதம், நேர்காணல் என்ற நிலைகளிலும் வெற்றி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.11.2014
இணையதள முகவரி: http://www.syndicatebank.in/downloads/recruitment/PGD-B&F/ADMISSION-PGD%28B&F%29-HO-HRDD-2014-15_Revised.pdf