சின்னத்திரையில் நயன்தாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சின்னத்திரையில் நயன்தாரா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது விஜய்யின் ‘தளபதி 63” படத்திலும், ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒருசில படங்களில் நடித்து வரும் இவர் சின்னத்திரைக்கு வர உள்ளதாக பிரபல தொலைக்காட்சி சேனல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்களை மட்டுமே தேர்வு செய்து நிகழ்ச்சிகளை வழங்கி வரும் அந்த தொலைக்காட்சியில் பணிபுரிய நயன்தாராவும் ஒப்புக்கொண்டதாகவும், இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஷால், விஜய்சேதுபதி உள்பட பிரபல நடிகர்கள் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நிலையில் நயன்தாராவுக்கு நிகழ்ச்சி தொகுப்பு பணி வழங்கப்படுமா? அல்லது வேறு ஏதோனும் முக்கிய நிகழ்ச்சியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply