சின்ன கேப்டனின் போலீஸ் பட டைட்டில் அறிவிப்பு

சின்ன கேப்டனின் போலீஸ் பட டைட்டில் அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் மகன் சின்ன கேப்டன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘மித்ரன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலன்விசாரணை, மாநகர காவல் உள்பட பல திரைப்படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்த விஜயகாந்த் பாணியில் தற்போது அவரது மகனும் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை பூபாலன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் வீரம்’, ‘வேதாளம்’, மற்றும் ‘விவேகம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இயக்குனர் சிவாவிடம் பணிபுரிந்தவர். அருண்ராஜ் இசையில் ரூபன் படத்தொகுப்பில் ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் வம்சிகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Leave a Reply