சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணின் புதிய மாற்றம்: மாணவர்கள் மகிழ்ச்சி
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
அதாவது தற்போது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பொதுத்தேர்வில் 33%மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் ஆகிய இரண்டும் பெறுவது கட்டாயமாகஉள்ளது. இந்த முறையால் பல மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வில் தோல்வி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இனிமேல் எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து 33%மதிப்பெண் பெற்றால்போதும் என்று மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10ஆம் வகுப்பு, சசிபிஎஸ்இ , மதிப்பெண் திட்டம், மாணவர்கள்