சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பிய அரசின் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்

சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பிய அரசின் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்

கடந்த சில வாரங்களுக்கு முன் சிபிஐ இயக்குநர் அலோக் உள்பட இரண்டு அதிகாரிகளை மத்திய அரசு கட்டாய விடுமுறையில் அனுப்பியது. ஊழல் புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து அலோக் வெர்மா பதிவு செய்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில்
சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அவரிடம் மீண்டும் சிபிஐ இயக்குனர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இருப்பினும் இது தொடர்பாக பிரச்னை தீராதவரை அலோக் வர்மா முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply