சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு வரிவிலக்கு
சிம்பு, மஞ்சிமாமோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல ரிசல்ட்டை பெற்றுள்ளது. ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் சம அளவில் கலந்து விறுவிறுப்பான திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக கவுதம்மேனனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை தற்போது கிடைத்துள்ளது. தமிழக அரசின் 30% வரிவிலக்கு காரணமாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படம் தமிழை போலவே தெலுங்கிலும் நல்ல ஹிட் ஆகியுள்ளதாகவும் செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றது. சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.