சிம்புவின் இந்த புதிய ஸ்லிம் தோற்றம் எந்த படத்திற்கு?

சிம்புவின் இந்த புதிய ஸ்லிம் தோற்றம் எந்த படத்திற்கு?

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் அவரது தோற்றம் எடை கூடிய நிலையில் காணப்பட்டது. அவரது தோற்றம் சர்ச்சைக்குரியதானதோடு மீண்டும் அவர் பழைய தோற்றத்திற்கு மீண்டு வருவது கடினம் என்றே கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது சிம்புவின் ஸ்லிம் தோற்றம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அடர்ந்த மீசை மற்றும் தாடியோடு கூடிய இந்த ஸ்லிம் தோற்றம் எந்த படத்திற்கு என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை

சிம்பு தற்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து இயக்கவுள்ளதாகவும், அதனையடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த இரண்டு படங்களின் ஒரு படத்தின் தோற்றம்தான் இது என்று கூறப்படுகிறது.

Leave a Reply