சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ டிரைலர் எப்போது? புதிய தகவல்
சிம்பு நடித்த ‘செக்க சிவந்த வானம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்ரியை பெற்ற நிலையில் தற்போது அவர் சுந்தர் சி இயக்கி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியையும் சிம்பு முடித்துவிட்டதால் வெகுவிரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என இந்தட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது
ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
Coming Soon #VandhaRajavadhanVaruven Trailer ! #STR #SundarC #VRVTrailerComingSoon pic.twitter.com/2Eu51AbbxK
— Lyca Productions (@LycaProductions) November 20, 2018