சிம்பு வீட்டில் திருமண வேலை! யாருக்கு திருமணம்?

சிம்பு வீட்டில் திருமண வேலை! யாருக்கு திருமணம்?

சிம்பு வீடு மீண்டும் திருமணக்கிளை கொண்டதாகவும், சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு திருமணம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது

சிம்புவின் சகோதரரும், ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையமைப்பாளருமான குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியது தெரிந்ததே. அவர் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிப்பதால் தான் மதம் மாறியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது குறளரசனின் திருமணம் வரும் ஏப்ரலில் நடைபெறவிருப்பதாகவும், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த திருமணத்தை எளிமையாக நடத்த டி.ராஜேந்தர் முடிவு செய்திருப்பதாகவும் திருமணம் குறித்த தகவலை அவர் விரைவில் அதிகார்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. சிம்புவின் திருமணம் கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் நிலையில் அவரது திருமணம் எப்போது? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply