சிரஞ்சீவியால் சஸ்பெண்ட் ஆன 7 போலீசார்!
பணியில் இருந்தபோது சிரஞ்சீவி படம் பார்த்ததால் ஆந்திராவில் ஏழு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சமூக சமூகநலத் துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படவுள்ள நிலையில் அதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு பந்தி ஆத்மகுர், ரச்சர்லா, கோஸ்பேடு உள்ளிட்ட 7 போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால் இந்த ஏழு பேர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் நேற்று வெளியான சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மரெட்டி’ படத்தை பார்க்க சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி தியேட்டரில் ஆடிப்பாடி செல்பி வீடியோக்களையும் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோக்கள் உயரதிகாரிகளின் பார்வையில் பட்டதால் பணி நேரத்தில் படம் பார்க்க சென்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஏழு போலீசார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.