சிறப்புக்காவல் படை தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னது ஏன்? டிஜிபி விளக்கம்
தமிழக டிஜிபி ராஜேந்திரன் சற்றுமுன்ன தமிழகம் முழுவதும் சிறப்புக்காவல் படை தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவி பிறப்பித்திருந்தார். இதனால் பொதுமக்களிடையே பல்வேறு கற்பனைகளுடன் கூடிய அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடைமுறையே, இது ஒரு வழக்கமான நிகழ்வு தான். எனவே தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.,