சிறுதானிய முருங்கை கீரை அடை செய்வது எப்படி?

சிறுதானிய முருங்கை கீரை அடை செய்வது எப்படி?

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கை கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு – கால் கிலோ,
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி – கால் கிலோ,
முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை – 4 டீஸ்பூன்,
வெங்காயம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
முருங்கை கீரை – 2 கைப்பிடி
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

அனைத்தும் நன்றாக ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும்.

காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, அரைத்துக்கொள்ளவும்.

முருங்கைக்கீரையை சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து வெங்காயத்தை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சூப்பரான சிறுதானிய முருங்கை கீரை அடை ரெடி.

Leave a Reply