சிறுநீர் வங்கி மூலம் உரம் உற்பத்தி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி யோசனை
உரம் இறக்குமதியை குறைக்கும் வகையிலும் இயற்கை உரங்களின் பயன்பாட்டை பெருக்கும் வகையில் சிறுநீர் சேமிப்பு வங்கி அமைத்து அதன் மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி யோசனை கூறியுள்ளார்.
இந்த திட்டம் குறித்து ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும், ஆரம்ப நிலையில் உள்ள இந்த திட்டம் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மனிதர்களின் சிறுநீரில் ஏராளமான நைட்ரஜன் உள்ளதால் அவற்றை வீணாக்காமல் லாபமாக மாற்றுவதே எனது கொள்கை என்றும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சங்கடமும் இல்லை என்றும் கூறிய அமைச்சர் கட்காரி, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்திற்கு மாற்றாக இந்த இயற்கை உரம் உள்ளதாகவும், இதனுடன் நைட்ரஜனை சேர்க்கும் போது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.