சிறுபான்மை பள்ளிகள் குறித்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து

சிறுபான்மை பள்ளிகள் குறித்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து

50% சிறுபான்மையினர் சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து என்று தமிழக அரசு சமீபத்தில் அரசாணை ஒன்றை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து கிறிஸ்துவ அமைப்பு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பின்படி 50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

Leave a Reply