சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வாரம் ரூ.1500 கொடுக்கும் குடும்பத்தினர்

சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வாரம் ரூ.1500 கொடுக்கும் குடும்பத்தினர்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வாரம் ஒன்றுக்கு ரூ.1500 தனது சொந்த செலவிற்காக குடும்பத்தினர்களிடம் இருந்து பெற்றுவருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இதுகுறித்து சிறை அதிகாரிகள் ஊடகம் ஒன்றுக்கு கூறியதாவது: “நீதிமன்ற காவல் மற்றும் தண்டனை கைதிகள் தங்களின் தேவைகளுக்காக வாரம் ஒருமுறை ரூ.1,500 ஐ அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து பெறலாம். சிறைக் கைதிகள் நல நிதியில் சேர்க்கப்பட்டு அதை வங்கி போல் டெபாசிட் செய்துகொள்ள முடியும். இதற்காகத் தனி கார்டு கொடுக்கப்படும். இதனைப் பயன்படுத்தி சிறையில் உள்ள கேண்டீனில் கைதிகள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள முடியும்.

ஆனால் அதனைப் பணமாக வைத்துக்கொள்ள முடியாது. இந்த விதிமுறைகளின்படியே ப.சிதம்பரத்துக்கும் அவரது குடும்பத்தினர் 1,500 ரூபாய் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் தனது அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொள்கிறார்”

Leave a Reply