சிறையில் உள்ள ஹரியானா சாமியாரை பார்க்க வந்த சகோதரிகள் திடீர் கைது.

rampallஹரியானா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஆசிரமம் நடத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராம்பாலை பார்ப்பதற்காக அவரது சகோதரி ராஜ்கலா மற்றும் 2 பெண்கள் நேற்று சிறைச்சாலைக்கு சென்றனர்.

சாமியாரை பார்க்க வந்த சகோதரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு தெரியாததால் நேராக சிறைச்சாலைக்கு சென்று சாமியாரை பார்த்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார் அதே வழக்கில் சாமியாரின் இரு சகோதரிகளையும் கைது செய்தனர். இதனால் சாமியாரின் சகோதரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Reply