சிறையை உடைத்து 400 பேர் தப்பியதால் லிபியாவில் பரபரப்பு

சிறையை உடைத்து 400 பேர் தப்பியதால் லிபியாவில் பரபரப்பு

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்ட அப்பன் ஜாரா என்ற சிறையில் உள்ள கைதிகள் சிறையில் கலவரத்தை ஏற்படுத்தினர். பின்னர் அங்கிருந்து 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய சிறைக் காவலர்கள் அங்கு ஏற்பட்ட கலவரத்தை அடக்கவில்லை. தப்பி ஓடிய கைதிகளை தடுத்து நிறுத்தவில்லை. சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

கடந்த ஒருவாரமாக லிபியா தலைநகரான திரிபோலியில் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply