சிலைக்கு ரூ.3000 கோடி, கஜாவுக்கு ரூ.350 கோடியா? கனிமொழி எம்பி கேள்வி

சிலைக்கு ரூ.3000 கோடி, கஜாவுக்கு ரூ.350 கோடியா? கனிமொழி எம்பி கேள்வி

கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய அரசு முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ.350 கோடி அறிவித்துள்ளது குறித்து விமர்சனம் செய்த திமுக எம்பி கனிமொழி, ”உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! என்று கூறியுள்ளார்.

கனிமொழியின் இந்த கருத்துக்கு பதில் கூறியுள்ள பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ‘ ‘குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை, ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? என கனிமொழிக்கு மறுகேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழி, எச்.ராஜா இருவருடைய கருத்துக்களும் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply