சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’வுக்கு மீண்டும் ‘யூ’ சான்றிதழ்
சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குழந்தைகளை கவரும் படம் என்பதால் இதுவரை அவருடைய படங்கள் ‘யூ’ சான்றிதழை தவறவிட்டதில்லை. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீமராஜா படத்திற்கும் தற்போது ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சார் குறித்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ’24 ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
மேலும் இந்த படம் 158 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும் வகையில் ரன்னிங் டைமை பெற்றுள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் என்பது ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான சரியான ரன்னிங் டைமாக கருதப்படுகிறது
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, மற்றும் ரஜினிமுருகன்’ படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘3வது படமான இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் மற்றும் கீர்த்திசுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
https://twitter.com/RDRajaofficial/status/1034729659525619712