சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு நீதிமன்றம் தடை
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் ஹீரோ படத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ‘ஹீரோ’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது