சிவகார்த்திகேயன் படத்தை காப்பாற்றிய அஜித் பட விநியோகிஸ்தர்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ஒன்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் இந்த படம் பொருளாதார சிக்கல் காரணமாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கு கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கை கொடுத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது 24am ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது என்றும் இந்த டைட்டிலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கும் இந்த படம் இயக்குனரின் முந்தைய படம் போலவே இதுவொரு சயின்ஸ்பிக்சன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
#SK14 title today.. Excited😇👍 pic.twitter.com/zIAPFZdZHh
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 3, 2020
We're very happy to announce our next, with @Siva_Kartikeyan once again! This time on a never-before kinda project. #SK14 in association with @24AMSTUDIOS directed by @Ravikumar_Dir with music by 'Isai Puyal' @arrahman
TITLE COMING UP AT 5 PM TODAY! pic.twitter.com/ymBB3t03pa— KJR Studios (@kjr_studios) February 3, 2020