சிவசேனாவிடம் பலிக்காத அமித்ஷாவின் மேஜிக்!
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த உடன் மெஜாரிட்டி கிடைக்காத நேரத்தில் எதிர்க்கட்சிகளை உடைத்து அதில் ஒரு பிரிவை அழைத்துவந்து ஆட்சி அமைப்பதை பாஜக ஒரு தந்திரமாக செயல்பட்டு வந்தது
அமித்ஷாவின் இந்த மேஜிக் கோவா, கர்நாடகா, மணிப்பூர் உள்பட ஒருசில மாநிலங்களில் பலித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து, அஜித் பவார் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி, அந்த அணியை பாஜக விற்கு ஆதரவு கொடுக்க வைத்தது அமித்ஷாவின் மேஜிக்
ஆனால் அந்த மேஜிக் சிவசேனாவிடம் மட்டும் பலிக்கவில்லை. சிவசேனா எடுத்த அதிரடியான சில நடவடிக்கைகளால் தற்போது பாஜகவின் அரசு கவிழ்ந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவை பொருத்தவரை சிவசேனா வைத்தது தான் சட்டம் என்று பல பகுதிகளில் இருந்து வரும் நிலையில் பாஜகவின் அதிரடி நடவடிக்கைகள் சிவசேனாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை
சிவசேனா இந்த முறை எப்படியும் முதல்வர் பதவியை பிடித்து தீரவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நிலையில் அந்த எண்ணம் தற்போது நிறைவேறும் நிலைக்கு சென்றுவிட்டது
வரும் 5 ஆண்டுகளில் சிவசேனா நல்ல ஆட்சியை கொடுத்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு பாஜக மட்டுமின்றி எந்த கட்சியாலும் அசைக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது
அதிமுக உட்பட பல கட்சிகள் பாஜகவிற்கு பயந்து நடுங்குவது போல் இல்லாமல் பாஜகவை எதிர்த்து வெற்றி பெற்ற ஒரே கட்சியாக சிவசேனா இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்