சிவசேனாவிற்கு சரத்பவார் வைத்த நிபந்தனை:
பாஜக-சிவசேனா கூட்டணியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது
இந்த நிலையில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒரு நிபந்தனையை வைத்துள்ளார்.
இதன்படி மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சி விலகி வந்தால் நாங்கள் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம் என்றும், மேலும் ஐந்து ஆண்டுகள் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராகவும் இருக்கலாம் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிபந்தனையை சிவசேனா ஏற்றுக்கொள்ளும் என்றே கருதப்படுகிறது