சிவபெருமானுக்கு பிடித்தமான மலர்கள்

சிவபெருமானுக்கு பிடித்தமான மலர்கள்

சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுவதே வழக்கம். அவருக்குப் பிடித்தமானதும் வில்வ இலைதான். இது தவிர சிவபெருமான் விரும்பும் மலர்களாக சில குறிப்பிடப்படுகின்றன.

சிவாலயத்தில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் அந்த மலர்கள்:- கொன்னை, வன்னி, எருக்கு, ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, செங்கழுநீர், தும்பை போன்றவையாகும். இந்த மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.

மும்மூர்த்தி லிங்கம் :

கரூரில் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் அமைந்துள்ளது. கல்யாண தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், திருமணத் தடை உடனடியாக நீங்கும் என்பது நம்பிக்கை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டுள்ள இந்தக் கோவிலில் பசுபதிநாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு கொண்டது இந்தத் திருத்தலம். இங்குள்ள சிவலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகமாகவும், நடுப் பகுதி திருமால் பாகமாகவும், மேல் பகுதி ருத்திர பாகமாகவும் இருப்பது சிறப்பு. இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்த ஒரு மூர்த்தியாக இந்த சிவலிங்கத்தை கருதுகிறார்கள்.

Leave a Reply