நேற்று நாடு முழுவதும் சிவராத்திரி நிகழ்ச்சியை கொண்டாடப்பட்ட நிலையில் சிவராத்திரி பிரசாதம் சாப்பிட்ட 70 பேர் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது அங்கு உள்ள கர்பூர் என்ற பகுதியில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன
இந்த பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மூன்று மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்