சிவில் நீதிபதிகள் தேர்வு: வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி

சிவில் நீதிபதிகள் தேர்வு: வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி

தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி வழக்கறிஞர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக உள்ளது. மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள் முதல் அதாவது செப்டம்பர் 23-ம் தேதி முதல் தொடங்கும் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிவித்துள்ளார். எனவே சிவில் நீதிபதிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள வழக்கறிஞர்கள் இந்த இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயிற்சி பெற விரும்புவோர் பார் கவுன்சில் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவில் நீதிபதிகள் நியமனத்துக்கான போட்டித்தேர்வு வரும் நவம்பர் 24ல் நடைபெறும் என டி.என்.பி.எஸ்சி. ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து அக்டோபர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

Leave a Reply