சி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்

சி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி யூனியன் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயின்று வரும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை டெல்லி அரசே செலுத்தும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் டெல்லியில் பயின்று வரும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

டெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளதை அடுத்து ஆளும் ஆம் ஆத்மி அரசு பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் பெண்கள் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, தற்போது 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை டெல்லி அரசே செலுத்தும் என அறிவித்துள்ளதால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

இருப்பினும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் கட்டண உயர்வால் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை செலுத்த தில்லி அரசு அறிவித்துள்ளதாகவும், இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Leave a Reply