சீனாவில் பூமிக்கு அடியில் 17 மாடியில் சொகுசு ஓட்டல்
உலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர ஓட்டல் ஒன்று 17 மாடியில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த ஓட்டலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு பகுதியில் ஆடம்பர ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஓட்டல் கட்டும் பணி தற்போது நிறைவு பெற்று திறப்பு விழாவையும் கண்டுள்ளது.
பூமிக்கு அடியில் 17 மாடி கட்டிடமாக கம்பீரமாக நிற்கும் இந்த ஓட்டலில் ஓரிரவு தங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக இந்திய மதிப்புக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தீம் பார்க்குடன் உருவாகியுள்ள இந்த ஓட்டலில் 336 அறைகள் உள்ளன.