சீனாவில் ஷான்ஸி மாகாணத்தை சேர்ந்த 21 வயது

சீனாவில் ஷான்ஸி மாகாணத்தை சேர்ந்த 21 வயது

இருபது வருடங்களுக்கு முன்னர் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும் மைதானத்திற்கு விளையாட செல்வது வழக்கம். மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதியே பாடியுள்ளார். ஆனால் இன்றைய டெக்னாலஜி உலகில் விளையாட்டு என்பதே வீடியோ கேம் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. குழந்தைகள் வீடியோ கேமுக்கு அடிமையாகி போவதையும் நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் இந்த வீடியோகேம் விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் வீடியோகேமுக்கு அடிமையான சீனாவை சேர்ந்த 21 வயது பெண் ஒருவரின் கண்பார்வை பாதிக்கப்பட்டு பரிதாபமாக குருடாகியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த இளம்பெண் தனது ‘ஸ்மார்ட் செல்போனில் தொடர்ந்து 24 மணி நேரம் வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாக திடீரென கண்பார்வை மங்கிக்கொண்டே வந்ததாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவரது கண்பார்வை முற்றிலும் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Leave a Reply