சீனா-வடகொரியா விமான போக்குவரத்து திடீர் துண்டிப்பு
அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் சிம்மசொப்பனமாக இருந்து வரும் வடகொரியா, தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து உலகையே பயமுறுத்தி வருகிறது. பொருளாதார தடை உள்பட எந்த தடையையும் அந்நாட்டு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் வட கொரியாவுடனான விமான போக்குவரத்தை திடீரென சீனா துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்த பின்னரே இந்த அதிரடி நடவடிக்கையை சீனா எடுத்துள்ளதால், டிரம்ப் அறிவுரையின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த நடவடிக்கை குறித்து சீனா கூறியதாவது: வடகொரியாவுக்கு செல்லும் விமானத்தில் போதிய பயணிகள் வரவில்லை. எனவே, வர்த்தக ரீதியாக பாதிப்பு ஏற்படுவதால் போக்குவரத்த நிறுத்தி விட்டோம். இதில், அரசியல் காரணங்கள் இல்லை என்று கூறி உள்ளது. ஆனாலும், இதில் வேறு பின்னணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.