சீன அதிபரின் வருகைக்கு திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

சீன அதிபரின் வருகைக்கு திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள சில திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டது தெரிந்தது

குறிப்பாக சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் இன்று ஒரு சில திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை ஏன்? திபெத்தியர்கள் ஏன் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

கடந்த 1950 ஆம் ஆண்டு தீபெத்தை சீனா ஆக்கிரமித்து சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்தது. தனி கலாச்சாரம் தனி நாடு என வாழ்ந்து வந்த திபெத்திய மக்கள் சீனாவிற்கு அடிமையாகினர். இதனால் கடந்த 1958ம் ஆண்டு திபெத்தியர்கள் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினர். அப்போது சுமார் 87 ஆயிரம் திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர்

திபெத்தியர்களின் அரசியல் மற்றும் ஆன்மீக தலைவராக இருந்த தலாய்லாமாவின் உயிருக்கு சீன அரசு கெடு வைத்தது. இதனை அடுத்து தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்

தலாய்லாமாவை ஒப்படைக்க வேண்டுமென இந்தியாவுக்கு சீனா மிரட்டல் விடுத்தது. ஆனால் இந்திய அந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் இப்போதுவரை தலாய் லாமாவுக்கு தஞ்சம் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சீனாவில் உள்ள கோடிக்கணக்கான சீனர்கள், திபெத்தியர்களின் மூதாதையர்கள் தான் என்ற உண்மையை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த உண்மையைக் குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதற்காகவே திபெத்தை ஆக்கிரமித்து அதன் வரலாற்றை அழிக்க சீனா முயல்வதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

திபெத்தில் சீன ஆட்சி என்பது ஒரு இனத்தையே நசுக்குவதற்கு சமம் என்றும் இதற்காக கடந்த 2009 முதல் 2011 வரை நூற்றுக்கணக்கானோர் தீயிட்டு தங்களை தாங்களே பலி கொடுத்துக் கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

திபெத் நாட்டின் மக்களின் கலாச்சாரங்கள் அடையாளங்கள் சீனர்களால் அழிக்கப்படுவதால் தான் சீனாவுக்கும் சீன அதிபருக்கும் திபெத்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமெரிக்கா பாகிஸ்தான் மற்றும் ஒருசில நாடுகள் திபெத் சுதந்திரம் குறித்து வாயை திறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply