சீஸ் மினி அடை

recepeeதேவையானவை: இட்லி அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 5, சீஸ் துருவல் – ஒரு கப், இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: அரிசியையும், பருப்பு வகைகளையும்  ஒன்றுசேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு… காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயம், உப்பு சேர்த்து சற்றே கொரகொரவென அரைத்து எடுக்கவும். தோசைக்கல்லை காயவிட்டு மாவை சிறிய அடைகளாக ஊற்றி, அதன் மீது சிறிதளவு கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்… அப்படியே சாப்பிடலாம்!

Leave a Reply