சுகாதாரத்துறையில் தினமும் ரூ.1000 சம்பளத்தில் வேலை: தவற விடாதீர்கள்!
தமிழக அரசின் சுகாதாரத்துறையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி , ஓமியோபதி ஆகிய பிரிவுகளில் மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சித்த மருத்துவ ஆலோசகர், ஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர், யுனானி மருத்துவ ஆலோசகர், ஓமியோபதி மருத்துவ ஆலோசகர் ஆகிய நான்கு பதவிகள் காலியாக உள்ளது. இவற்றில் சித்த மருத்துவ ஆலோசகர் பதவிக்கு 32 காலியிடங்களும், ஆயுர்வேதா பிரிவுக்கு 3 காலியிடங்களும், , யுனானி மருத்துவ ஆலோசகருக்கு 1 காலியிடமும், ஓமியோபதிக்கு 2 காலியிடங்களும், உள்ளது.
இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகம் என்றாலும் ஆயுஷ் திட்டத்தின் காலத்தைப் பொறுத்து பணிகாலத்தை நீட்டிக்கச் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.
சம்பளம்: தினம் ரூ.1000 (வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை)
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி
வயது: 18-57
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 18
இந்த பணி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கவும்