சுபஸ்ரீயை பயன்படுத்தி கொண்ட விஜய், விஜய்யை பயன்படுத்தி கொண்ட கமல்!
நேற்று நடைபெற்ற விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியபோது சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் மரணம் அடைந்த சுபஸ்ரீ கூறுகையில், ‘சுபஸ்ரீ மரணம் அடைந்த விவகாரத்தில் யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை மற்றும் தமிழக அரசை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.
சுபஸ்ரீ மரணம் அடைந்து பிரிண்டிங் பிரஸ் நபர் கைது செய்யப்பட்டவுடன் இதனை அவர் கூறியிருந்தால், அந்த விவகாரத்தில் அவர் தனது கருத்தை தெரிவித்ததாக இருந்திருக்கும். ஆனால் ‘பிகில்’ விழாவில் அதனை கூறி படத்திற்கு விளம்பரம் தேடும் முயற்சியாக இந்த பேச்சு இருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு தருவதாக கூறி கமல்ஹாசனும் இந்த விளம்பரத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும் டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது