சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்திற்கு சீல்!
சென்னை பள்ளிக்கரணையில் பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் குறித்து திரடி நடவடிக்கை எடுத்த போலீசார், முதல்கட்டமாக லாரி டிரைவரை கைது செய்த நிலையில் தற்போது சுபஸ்ரீ பலியாக காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்..
லாரி டிரைவரை கைது செய்ததும், பேனர் அச்சடித்த அச்சகத்தையும் சீல் வைத்தது சரிதான், ஆனால் பேனர் வைத்தவர், வைக்கச்சொன்னவரை எப்போது கைது செய்வீர்கள்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.