சுவஸ்திக் சின்னத்தை துரத்தும் துடைப்பம் சின்னம்? ஆம் ஆத்மிக்கு கடும் கண்டனம்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 20-ம் தேதி, துடைப்பத்துடன் ஒருவர், சுவஸ்திக் போன்ற சின்னத்தினை துரத்துவது போல உள்ள படத்தினை பகிர்ந்திருந்தார். இந்த பதிவு பாஜக ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: நான் பகிர்ந்த பதிவிற்கு பாஜகவினர் தவறான விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்து மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். அந்த பதிவு ஹிட்லரின் சர்வாதிகாரத்தினை குறிக்கும் விதமாகவே உள்ளது. பாஜகவினர் முதலில் நாஜி சின்னத்திற்கும், இந்து சின்னத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை புரிந்து கொள்ள வேண்டும். இது முட்டாள் தனமான செயலாகும். நாஜி சின்னத்தை தங்கள் சின்னமாக கூறுவது பாஜகவின் அறியாமையை குறிக்கிறது.