சுவீடனில் குடிபோதையில் கார் ஓட்டிய பெண் அமைச்சர் ராஜினாமா
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடன் நாட்டின் 29 வயது பெண் அமைச்சர் எய்டா ஹட்ஷியாலிக் என்பவர் குடிபோதையில் கார் ஓட்டியதை போலீசார் கையும் களவுமாக பிடித்ததால் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்னியா நாட்டில் இருந்து அகதியாக சுவீடனுக்கு வந்த எய்டா ஹட்ஷியாலிக், தனது கடுமையான உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேறி அமைச்சர் பதவிக்கு வந்தார். ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக மதுவுக்கு அடிமையானதாகவும், மதுப்பழக்கத்தால் இன்று அவர் அமைச்சர் பதவியை இழந்ததோடு தனது இத்தனை வருட உழைப்பையும் இழந்துள்ளார்.
கைது செய்யப்பட்டதும் எய்டா ஹட்ஷியாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘எனது வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது. அதற்கு பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.