சுவையான சத்தான கம்பு லஸ்ஸி
டயட்டில் இருப்பவர்கள் வயதானவர்கள் அனைவருக்கும் உகந்தது இந்த கம்பு லஸ்ஸி. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு – ஒரு கப்,
தயிர் – 3 கப்,
இஞ்சி – சிறிய துண்டு,
கறிவேப்பிலை – 10 இலைகள்,
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
* கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஆறியதும் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
* அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில் கரைத்து வைத்துள்ள கம்பு மாவை ஊற்றிக் கிளறி வேகவிடவும்.
மாவு நன்கு வெந்தபின் இறக்கி ஆறவிடவும்.
* மாவு நன்றாக ஆறியதும் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* சுவையான சத்தான கம்பு லஸ்ஸி ரெடி.