சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி?

சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி?

1மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மக்காச்சோளம் – ஒரு கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டு பல் – தலா 2,
சோம்பு – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

* மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் வேக வைக்கவும்.

* அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் சிறிது தெளித்து நன்கு கிளறி விடவும்.

* 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

* சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் ரெடி.

Leave a Reply