சுவையான பேபி கார்ன் 65 செய்வது எப்படி
மாலையில் மொறுமொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் வீட்டில் பேபி கார்ன் இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சுவையான பேபி கார்ன் 65 செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – 20 (சிறியது)
சாட் மசாலா பவுடர் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
தேவையான அளவு மாவிற்கு…
மைதா – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பேபி கார்னின் தோலை உரித்து வேண்டிய அளவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* பொரித்த பேபி கார்னின் மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் 65 ரெடி!!!