சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா
இட்லி உப்புமா கேள்விபட்டிருப்பீர்கள். துவரம் பருப்பில் செய்யும் இட்லி உப்புமா சூப்பராக இருக்கும். இப்போது துவரம்பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 1 கப்,
துவரம்பருப்பு – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
சோடா உப்பு – 1 சிட்டிகை,
மோர் மிளகாய் – 3,
காய்ந்தமிளகாய் – 3.
தாளிக்க…
எண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை :
* இட்லி அரிசியையும், துவரம்பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.
* இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
* இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயை காயவைத்து மோர் மிளகாய், காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் கொரகொரப்பாக கையால் பொடித்து கொள்ளவும்.
* பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் உதிர்த்த இட்லிகளை சேர்க்கவும். இட்லி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
* கடைசியாக இறக்கும் போது கொரகொரப்பாக பொடித்த மோர் மிளகாய், காய்ந்தமிளகாயை போட்டு கிளறி பரிமாறவும்.
* சூப்பரான சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா ரெடி.