சூப்பர் ஓவரில் விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
ஒருநாள் கிரிக்கெட் போட்டி சம ரன்களில் அதாவது டிராவில் முடிவடைந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க விளையாடப்படும் ஒரு ஓவர் கொண்ட போட்டியே இந்த சூப்பர் ஓவர்
ஏற்கனவே விளையாடிய 11 பேர் கொண்ட அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடவேண்டும்
3 பேட்ஸ்மேன்கள் மற்றும் ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே பயன்படுத்தவேண்டும்
2 விக்கெட் விழுந்தால் ஒரு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிடும்
போட்டியில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய அணியே சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்யும் பீல்டிங் செய்து அணி சூப்பர் ஓவரில் முதலில் பந்து வீசும்
அதிக ரன்கள் பெறும் அணியே வெற்றி பெறும்
சூப்பர் ஓவரும் சமனில் முடிவடைந்தால் மொத்த போட்டியிலும் அதாவது இன்னிங்ஸ் மற்றும் சூப்பர் ஓவரில் சேர்த்து அதிக பவுண்டரிகள் அடித்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்