சூப்பர் டீலக்ஸ் இந்தி ரீமேக்கிலும் விஜய்சேதுபதி?
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது
தமிழில் இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இந்தியிலும் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷில்பா கேரக்டருக்கு இந்தியில் உள்ள நடிகர்கள் நடிக்க தயங்குவதால் விஜய்சேதுப்தியே இந்தியிலும் நடிப்பார் என கூறப்படுகிறது
மேலும் பகத்பாசில், சமந்தா வேடங்களில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர், நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது